மணல் ஏற்றவிடாது மறித்த குடத்தனை மக்கள்
மணல் ஏற்றவிடாது மறித்த குடத்தனை மக்கள்
குடத்தனை பகுதியில் யாழ்ப்பாணத்தின் வீட்டுத்திட்டங்கள் மற்றும் இதர கட்டுமான பணிகளுக்காக மணல் மண் விநியோகம் இடம் பெற்றுள்ளது இந்நிலையில் அண்மையில் அப்பகுதி மக்களால் மணல் மண் பார ஊர்ரதிகளுக்கு ஏற்றவிடாது தடுக்கப்பட்டுள்ளது.
இது விடயம் தொடர்பாக குடத்தனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரிடம் கேட்ட போது மணல் மேட்டிலிருந்து பார ஊர்திக்கு ஏற்றும் இடம் வரை உழவு இயந்திரங்களிலேயே மணல் மண் கொண்டுவரப்படுவதாகவும் அங்கிருந்து பிரதேச செயலரது அனுமதி பத்திரத்திற்க்கு அமைவாக மணல் கோரிய ஆட்களுக்கான மணல் மண்ணை யாழ் மாவட்ட பார ஊர்தி உரிமையாளர் சஙகம் மேற்கொண்டு வந்தது.பார யாழ் மாவட்ட பார ஊர்தி சங்கத்தால் வடமராட்சி கிழக்கு பிரதேச பார ஊர்திகளுக்கும் கன்ரர் ரக வாகனங்களுக்கு விநியோகத்திற்க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே இன்று குடத்தனை பகுதி மக்களால் யாழ் மாவட்ட பார ஊர்தி உரிமையாளர் சங்க பார ஊர்திகளில் மணல் மண் ஏற்ற விடாது தடுத்துள்ளனர்.இது விடயம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தால் அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்க்கு வருகைதந்த பிரதேச செயலர் வடமராட்சி கிழக்குந. பிரதேச வாகன உரிமையாளர்ளுடனும் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் யாழ் மாவட்ட பார ஊர்தி உரிமையாளர் சங்கத்திற்க்கும் இடையே ஒரு ஒன்று கூடல் நடாத்தி தீர்மானம் முடிவு எடுத்த பின்னரே மீண்டும் மணல் மண் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெவித்த மணல் விநியோகத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்தனர்.தற்போது மீண்டும் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு பணிகள் தொடர்கிறது
Comments
Post a Comment