வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள் இன்று வெளியீடு

வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள் 18/01/2019  வெளியீடு
வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள்  வெளியீடு    மாகாண கடற்றொழிலாளர் அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவ கலந்துரையாடலில் வைத்து   இன்று காலை, 10:00 மணிக்கு விடுதியில் வடமாகாண மீனவர் இணைய தலைவர் ஜனாப் என் எம் ஆலம் தலமையில் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில்  இடம்பெற்றது.இதில் பிரதம அதிதிகளாகா தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் கேமன் குமார யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி சூசை தாசன் விரிவுரையாளர் செ.ரவீந்திரன்  அகியோரும் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களின் மீன் பிடி நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தமிழர் சுயாட்சி கழக பொது செயலரும் மாகாண முன்னாள் அமைச்சரமான அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.வடமாகாண மீன்பிடி இணைய தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் வெளியிட்டு வைக்க யாழ் பல்கலைக் கழக பேராசிரியர் கலாநிதி சூசைதாசன் விரிவுரையாளர் செ.ரவீந்திரன யாழ் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்ட மீன்பிடி நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் அகியோர் பெற்றுக் கொண்டனர்.தொடர்ந்து மாவட்ட தலைவர்கள் கருத்துக்களை வழங்கினர்.
இதே வேளை இங்கு உரையாற்றிய அனைவரும் மீனவர்களையும் மீன்பிடியையும் பாதுகாக்கின்ற சட்டங்கள் கடந்த வருடம் கொண்டுவரப்பட்டும் குறிப்பாக 2017 ம் ஆண்டின 11 ம் இலக்க   இழுவை மடி தடை சட்டம் மற்றும் வெளிநாட்டு படகுகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்கு படுத்தும் 2018. ம் ஆண்டின் முதலாம் இலக்க சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும்படி அரசையும் அரச அதிகாரிகள் துறைசார் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.அதேவளை வடமாகாணத்தில் திட்டமிட்ட கரையோர குடியேற்றங்களை நிறுத்துமாறும் தேசிய பூங்கா எனும் பெயரில் மீனவர்களின் வாழ்விடங்கள் மற்றும் கரையோரத்தில் மீனவர் கரைவலை பாடுகள் உட்பட. பல ஏக்கர் மீனவர் காணிகள் கடற்படையால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
      இதேவேளை ஒருவ மாற்றங்களால் பாதிக்கப்படுகின்ற போது  விவசாயிகள் உட்பட அனைவருக்கும் நிவாரணங்களை வழங்குவதாகவும் ஆனால் கடற்றொழிலாளர்களுக்கு எந்தவித  நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை எனவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டினர்.இதே வேளை தமது படகுகள் மற்றும் வெளியிணைப்பு இயந்திரங்கள் உட்பட மீன்பிடி உபகரணங்களுக்குரிய காப்புறுதிகளை   வழங்குவதற்கு உரிய திணைக்களங்கள் அக்கறை கொள்வதில்லை எனவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.  இதேவேளை சுருக்கு வலைக்கு எதிரான தடை சட்டம்   உள்ளபோதும் மத்திய அரசு 160 பேருக்கு சுருக்கு வலை தொழில் செய்ய அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர்கள் சுருக்கு வலை தொழிலுடன் டைனமெற் பாவித்தும் மின் ஒழி பாய்ச்சியும் தொடர்ந்தும் மீன் பிடியில் ஈடுபட்டு வருவதாக முல்லைத்தீவு  மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதி திரு அந்தோணிப்பிள்ளை கவலையுடன் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாண. மகளீர் மீனவ பிரதிநிதி தாங்கள் கரையோரங்களில் கடலட்டை பிடித்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வந்ததாகவும் கருவட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வந்ததாகவும் ஆனால் நவீன முறையில் தென்னிலங்கை மீன்பிடியாளர்கள் கரை ஓரத்தில் சட்டவிரோத கடலட்டை மற்றும் மீன்பிடியில் ஈடுபடுவதால் தாம் மிக மோசமாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இங்கு கருத்துரையாற்றிய தமிழ் சுயாட்சி கழக செயலரும் முன்னாள் மாகாண அமைச்சருமான் அனந்தி சசிதரன் மன்னாரில் தமது கட்சி நிதியில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முயன்றதாகவும் அதற்க்கு கடற்படை அனுமதி வழங்கவில்லை எனவும் அதற்க்கு கடற்படை அனுமதியளிக்குமெனில் தம்மால் பல பணிகளை மேற்கொள்ள மிடியும் எனவும் தெரிவித்ததிடன் மன்னாரில்  சட்டவிரோத மீன்பிடி தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.தொடர்ந்து மன்னார் மாவட்ட நிரியல் மீன்பிடி திணைக்கள் உதவி பணிப்ணிப்பாளர் மன்னாரில் கடந்த வருடம் 42 வழக்குகள். பதிவு செய்யப்பட்தாகவும் 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் எந்தெந்த இடங்களில் தொழில் செய்தார்களே  அந்த பகுதியில் மட்டும் தொழில் செய்ய அனும்திக்க வேண்டும் என்றும் பிற இடங்களில் தென்னிலங்கை மீனவர்கள் தொழிலில் ஈடுபடுவதாலேயே பல முரண்பாடுகள் காணப்படுவதாகவும் தெரித்ததுடன் மன்னார் மாவட்டத்தில் பேசாலை துறைமுகம் அமைப்பதற்கு சகல முன் ஏற்பாடு நிறைவுற்ற போதிலும் அங்கு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தாம் சட்ட நடவடிக்கைக்கு முன் வைக்கின்றபோது பல அழுத்தங்களுக்கு உள்ளாவதாகவும்  தெரிவித்தார்.
தொடர்ந்து பொது கலந்துரையாடல் இடம்பெற்றது அதனை தொடர்ந்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க பிரதிநிதி லவீனா  நன்றியுரையுடன் பிற்பகல் 1:00 மணிக்கு நிறைவுற்றது.

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்