விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனனர்.

இன்று 08-01-2019 மாலை பளை இயக்கச்சி பகுதியில் இராணுவத்தின் கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியத்தில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

பளையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் கட்டைக்காடு இராணுவ முகாமிலிருந்து இயக்கச்சி 552 படைப்பிரிவு முகாமுக்கு டீசல் அடிப்பதற்காக பயணித்த இராணுவத்தின் ட்ரக் வண்டியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பி.ஜெயக்குமார் (வயது 36) பளை, கே. குகதாஸ் (வயது 32) பளை மாசார், எஸ். ரதீஸ்வரன் (வயது 26) சுழிபுரம் வட்டுக்கோட்டை ஆகிய மூவரும் பலியாகியுள்ளனனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பளை பொலீஸாரும் கிளிநொச்சி தடயவியல் பொலீஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்