சட்டவிரோத மீன்பிடி தடை சட்டங்கள் கொண்டுவரப்பட்டும் அவை இன்றுவரை நடைமுறை படுத்தவில்லையென வடமாகாண மீனவர் இணைய தலைவர் ஆலம் குற்றச்சாட்டு
சுருக்கு வலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் உட்பட்ட தடை சட்டங்கள் ஒரு வருடத்திற்க்கு முன்னர் கொண்டுவந்தும் இதுவரை அதை நடைமுறை படுத்தவில்லையெனவும் தற்போதும் வடமாகாணத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குவலை சிலிண்டர் தொழில் மின் பாய்ச்சி மீன்பிடித்தல் உட்பபட்ட சட்டவிரோத தொழில்கள் இடம் பெற்று வருவதாக வடமாகாண மீனவர் இணைய தலைவர் ஆலம் குற்றச்சாட்டு அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவு மன்னார் பள்ளிமுனை பள்ளிக்குடா பூநகரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் இடம் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண மீன்பிடி இணைய ஒன்றுகூடல் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் யாழ்ப்பாணம் யாழ்பாடி விருந்தினர் விடுதியில் மாகாண மீன்வர் இணைய தலைவர் திரு ஆலம் தலமையில்இடம் பெற்றது இந் நிகழ்வில் தலமை உரையாற்றிய திரு ஆலம் மேற் கண்டவாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் கேமன் குமார சிறப்பு விருந்தினராக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசு தாசன் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க யாழ்ப்பாண தலைவர் இ.முரளீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் உட்பட்ட நான்கு மாவட்ட பிரதிநிதிகளும் கல்ந்து கொண்டனர்.வட மாகாண மீனவர்கள் அதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராந்து தீர்ப்பதற்க்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக இணை முகாமைத்துவ செயலணி ஒன்றினூடாக துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளையும் அழைத்து தீர்க்க முயற்சிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
Comments
Post a Comment