பருத்தித்துறை பிரதேச சபையின் எதிர்ப்பையும் மீறி பருத்தித்துறை நகரசபை பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட பகுதியான வல்லிபுரம் மாவடி சந்தி பகுதியில் தொடர்ச்சியாக கழிவுகளை கொட்டி வருகிறது.
பருத்தித்துறை பிரதேச சபையின் எதிர்ப்பையும் மீறி பருத்தித்துறை நகரசபை பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட பகுதியான வல்லிபுரம் மாவடி சந்தி பகுதியில் தொடர்ச்சியாக கழிவுகளை கொட்டி வருகிறது.பருத்தித்துறை நகரசபை கழிவுகளை பருத்தித்துறை பிரதேச சபை எல்லை பகுதிகளில் அகற்றக் கூடாது என பருத்தித்துறை பிரதேச சபையால் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலும் அத் தீர்மானத்தையும் மீறி பருத்தித்துறை நகர சபை தொடர்ந்தும் தமது கழிவுகளை வல்லிபுரம் மாவடி சந்தி பகுதியில் கொட்டி வருகிறது.இன்றைய தினமும் இரண்டு உழவு இயந்திரங்களில் கொண்டுவரப்பட்ட கழிவுகள் அப்பகுதியில் கொட்டியுள்ளனர்.இது தொடர்பாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ச.அரியகுமாரிடம் கேட்டபோது பருத்தித்துறை நகரசபை கழிவுகளை தமது பகுதிகளில் கொட்டுவது தீர்மானம் மூலம் தடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் புத்தூர் பகுதியில் கழிவகற்றும் ஏற்பாடு இடம்பெறுவதாகவும் இடையிடையே தமக்கு தெரியாமல் தமது பகுதிகளில் கழிவகற்றலில் ஈடு படுவதாகவும் தெரிவித்தார்.இது தொடர்பாக வட்டாரத்திற்கு உரிய பிரதேச சபை உறுப்பினர் தர்சன் தெரிவிக்கும் போது பருத்தித்துறை நகரசபையினர் இடையிடையே இவ்வாறு கள்ளத்தனமாக திண்ம கழிவுகளை வீதி ஓரங்களில் கொட்டி வருவதாதவும் இது பருத்தித்துறை நகர சபையின் பொறுப்பற்ற செயலென தெரி்வித்தார் இதேவேளை கற்கோவளம் பிரதேச சபை உறுப்பினர் சிவகுமார் கவிதாவிடம் கேட்டபோது தன்னால் குறித்த பகுதியில் கழிவகற்றல் மேற்கொள்ள கூடது அது கழிவகற்ற பொருத்தமற்ற இடம் எனவும் அதனை தடை செய்யுமாறு கடந்த 6 மாத காலத்திற்கு முன்னர் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறியதாகவும் இத் தீர்மானத்தையும் மீறியே அப்பகுதியில் நகரசபை கழிவுகளை கொட்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.இறித்த கழிவு கொட்டும் பகுதி துர் நாற்றமாகவும் அதிகளாவான தெரு நாய்கள் பெருக்கமாகவும் காணப்படுவது குறிப்பிட தக்கது.
Comments
Post a Comment