அரச காணி வழங்குவதில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் பாரபட்சம்
அரச காணி வழங்குவதில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் பாரபட்சம்
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் சொந்தமாக உறுதிக்காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்கும் போது பிரதேச செயலகம் பாரபட்சம் காட்டுவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் குறிப்பாக கட்டைக்காடு பகுதியில் அரச காணிகள் வழங்கும் போதே இவ்வாறு தனிப்பட்ட சலுகைகள் பாரபட்சம் காட்டப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .கட்டைக்காடு பகுதியில் காணி இல்லாதவர்கள் பிரதேச செயலகத்திற்க்கு காணி கோரி விண்ணப்பித்த பின்னர் அரச காணிகளில் குடியிருப்பது வழமை.பின்னர் பிரதேச செயலகத்தால் அனுமதி பத்திரம் வழங்கப்படும்.இந்நிலையில் பலரது காணிகளுக்கு அனுமதி பத்திரம் இல்லாத நிலையில் குடியிருக்கும் நிலையில் தனி ஒருவரை மட்டும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியது பலரையும் ஆச்சரியத்திற்க்கு உட்படுத்தியுள்ளது.குறித்த சட்ட நடவடிக்கைக்கு முன்வைக்கப்பட்டவரது காணிக்கு எதிரேயும் ஒருவர் சட்டவிரோதமாக அரச காணியை சீமெந்து தூண் மூலம் வேலி அடைத்துள்ளனர். அவருக்கு ஏற்கனவே 8 பரப்பு காணி உள்ள நிலையில் மேலதிகமாகவே இரண்டு பரப்பு காணியை பிரதித்துள்ளார் ஆனால் அவர்க்கு எதிராக ஏந்தவிதமான. நடவடிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை.இது தொடர்பாக அக்கிராம மக்கள் கருத்து தெரிவிக்கும் போது குறித்த 8 பரப்பு காணிக்கு மேலதிகமாக இரண்டு பரப்பு காணியை சட்டவிரோதமாக வைத்திருப்பவர்களுக்கும் பிரதேச செயலருக்கும் காணி உத்தியோகத்தருக்கும் தனிப்பட்ட நல்ல உறவு உள்ளதாகவும் இதனால் பிரதேச செயலகம் எந்தவித நடவடிக்கையும் ஏடுக்கவில்லை என பாதிக்ப்பட்டவர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment