ஹக்கீமிடம் மண்டியிட்ட சம்பந்தரின் ராசதந்திரமும், ரணிலிடம் சரணடைந்த சாணக்கியமும்
ஹக்கீமிடம் மண்டியிட்ட சம்பந்தரின் ராசதந்திரமும், 🤔🤔🤔🤔
ரணிலிடம் சரணடைந்த சாணக்கியமும் 🤔🤔🤔🤔
இன்று ஜனாதிபதி மைத்திரியை குறை சொல்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த கிழக்கு மாகாண சபையில் எதை செய்தது ?
11 உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களை கொண்ட முஸ்லீம் காங்கிரசிடம் ஆட்சி பொறுப்பை கையளிக்க வேண்டிய தேவை என்ன ?
கூடிய ஆசனக்களை வைத்துக் கொண்டு ஆட்சி அமைக்க முடியாமல் முஸ்லீம் கட்சியிடம் மண்டியிடும் போது குறைந்த பட்சம் வடகிழக்கு இணைப்புக்கான தமிழ்- முஸ்லீம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையாவது செய்திருக்கலாம் . அவற்றை கூட செய்யாமல் கேவலம் இரண்டு அமைச்சு பதவிக்காக தமிழ் இனத்தையே ஒரு சிறு பான்மையிடம் அடகு வைத்தது உலகில் வேறு எங்கும் நடக்காத அதிசயம் .
இன்று ஜனாதிபதி தவறு இழைத்து விட்டார் என்று அரசியல் நாடகம் ஆடும் கூட்டமைப்பு அன்று செய்தது என்ன என்ற கேள்வியே மேலோங்கி உள்ளது.
இன்று பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவு மைத்திரி- மகிந்த பக்கம் உள்ளது என்பதை புரிந்து கொண்ட கூட்டமைப்பு தலைமைகள் பக்க சார்பாக நடந்து கொண்டதன் விளைவே , இன்று ஒரு இனவாதியாக கருதப்படும் கிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநராக பதவி பெற்றது.
இப்போது வெளிவேசம் இட்டு கொக்கரிக்கும் கூட்டமைப்பால் கிழக்கு மக்களின் அச்சத்தை ரணிலிடம் சரணடைந்த உங்களால் தீர்க்க முடியுமா ?
கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் கைநழுவ விட்டாரா அல்லது கைகழுவி விட்டாரா சம்பந்தர்?
கைநழுவவிட சம்பந்தர் ஒன்றும் அரசியல் கத்துக்குட்டி இல்லை , திட்டம் போட்டு கைகழுவி விட்டுள்ளார் .
அன்புக்கினிய தமிழ் பேசும் உறவுகளே இதற்கு மேலும் கூட்டமைப்பின் சித்து விளையாட்க்களுக்கும் அவர்களின் சுகபோகவாழ்வுக்கும் இடமளிக்காது
1) கூட்டமைப்பை மக்கள் திருத்தும் விதமாக கேள்விகளை கேட்க வேண்டும்
இல்லையேனில் மக்களாகிய நீங்கள் திருந்த வேண்டும் . இவை இரண்டில் ஒன்று நடாக்காவிட்டால் இலங்கை தீவில் தமிழன் வாழ்ந்தான் என்று சரித்திர புத்தகத்தில் தான் படிக்க வேண்டும்.....
நன்றி..
Comments
Post a Comment