கழிவுகளை திறந்ந வெளிகளில் நீர் நிலைகளில் கலக்கக் கூடிய வகையில் முள்ளி சந்திக்கு அருகாமையில் சுமார் 200 மீட்டர் தொலைவில் அகற்றப்படுகிறது.
பருத்தித்துறை பிரதேச சபையால் தமது பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உட்பட நிரம்பிய மலசல கூடங்களிலிம் மற்றும் கழிவு நீர் குழிகளிலிருந்தும் கலி பவுசர் மூலம் உறுஞ்சுகின்ற கழிவுகளை திறந்ந வெளிகளில் நீர் நிலைகளில் கலக்கக் கூடிய வகையில் முள்ளி சந்திக்கு அருகாமையில் சுமார் 200 மீட்டர் தொலைவில் அகற்றப்படுகிறது.இதனால் குறித்த மனித கழிவுகள் மற்றும் திரவ கழிவுகள் அருகிலுள்ள நீர்த் தொடரில் கலக்கின்றது.இவ்வாறு நீர் நிலைகளில் கலக்கின்றபோது அவை பல்வேறு தொற்றுநோய் அபாயங்களை ஏற்படுத்த கூடியவை என்று அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பிரதேச சபை கழிவகற்றல் விடயங்களில் தலையிடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்றும் ஆனால் இவ்வாறு திறந்த வெளியில் மனித கழிவுகள் மற்றும் திரவ கழிவுகளை அகற்றுவதனால் பாரிய தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட கூடும் எனவும் அவர் தெரிவித்ததுடன் மனித கழிவுகள் மிக மிக பாதுகாப்பான முறையிலேயே அகற்ற பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.இதே வேளை சாவகச்சேரி நகரசபை மனித கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் பொறிமுறை ஒன்றை வைத்துள்ளதாகவும் அங்கு பருத்தித்துறை பிரதேச சபை கொண்டு சென்று அகற்றுவதில்லை எனவும் தெரிவிக்க படுகின்றது.இதேவேளை பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் பருத்தித்துறை நகர சபை என்பன வல்லிபுரம் மாவடி சந்தி பகுதியில் வீதி ஓரகளிலும் நீர் நிலைகளிலும் திண்ம கழிவுகளை நாளாந்தம் அகற்றி வருகின்றனர்.இதானால் அப்பகுதி துர் நாற்றம் வீசுவதுடன் கட்டாக்கலி நாய்களின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது இக் கட்டாக்காலி நாய்கள் வீதியால் செல்ல செல்கின்ற மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர. வண்டிகளில் செல்வோரை கடிப்பதற்க்காக் கலைத்து வருவதாகவும் போக்குவரத்தில் ஈடுபடும்நமக்கள் தெரிவிக்கின்றனர்.மனித கழிவுகள் மற்றும் திரவ திண்ம கழிவுகள் அகற்றுவதற்க்கு பிரதேச சபையால் கட்டணம் அறவிட படுகின்றது குறிப்பிட தக்கது
Comments
Post a Comment