வடமாராட்சி கிழக்கு மீனவர்கள் நிவாரணம் வழக்க கோரிக்கை
கடந்த பல நாட்களாக ஏற்பட்ட மோசமான கடற்கொந்தளிப்பு மற்றும் மோசமான காலநிலை. மாற்றத்தால் இரண்டு மாதங்களுக்கு மேலாக தாம் கடற்றொழிலில் ஈடுபடவில்லை இதனால் நூற்றுக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்வாதரத்திற்க்காக மிக மிக கஸ்டப்பட்டு கொண்டிருப்பதாகவும் தெரிவித்த மீனவர்கள் விவசாயிகள் வரட்சி மற்றும் வெள்ள பெருக்குகள் காரணமாக பாதிக்கப்பட்ட போது பல ஆயிரம் பெறுமதியான உலர் உணவு நிவாரங்ஙள் வழங்கப்பட்டது என்றும் தமது தொழில் பாதிக்க படுகின்ற போது அரசோ அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களோ அரசியல் வாதிகளோ கண்டு கொள்வதில்லை என்றும் இது ஒரு புறக்கணிப்பு நடவடிக்கை என்று வடமாராட்சி கிழக்கு மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.இது தொடர்பில் வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரனிடம் கேட்டபோது விவசாயிகளுக்கு வரட்சி மற்றும் வெள்ள அழிவுகள் ஏற்படும்போது நிவாரணம் வழங்கப்பட்டது உண்மை என்றும் மீனவர்களுக்கு இதுவரை எந்தவித நிவாரணமும் வழகக்கும் பொறிமுறை இருக்கவில்லை என்றும் உண்மையில் வடமாராட்சி கிழக்கு மீனவர்கள் கடுமையான பொருளாதார பாதிப்புக்கு உட்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்
Comments
Post a Comment