ஆழிப் பேரவலம் இறுவெட்டு மருதங்கேணியில் வெளியீடு
வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஆழிப் பேரலை காவியம் எனும் இறுவெட்டு வெளியீட்டு விழா வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரன் தலமையில் இன்று காலை 11:30 மணியளவில் இடம்பெற்றது.இதில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரி திருமதி சிஜீவா அவர்களும் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற பரதேச சபை செயலாளர் திரு புத்திர சிகாமணி செந்தமிழ் சொல்லருவி திரு.லலீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் முதல் பிரதியை வடமாகாண பண்பாட்டு அலுவல் கள் திணைக்கள அதிகாரியும் பிரதம விருந்தினருமாகிய சுஜீவா வெளியீட்டு வைக்க. கொடுக்கிளாய் கலைமதி கலாமன்றம் பெற்றுக் கொண்டது.இதில் சிறப்பு பிரதிகளை செந்தமிழ் சொல்லருவி லலீசன் ஓய்வு பெற்ற பபிரதேச சபை செயலாளர் புத்திர சிகாமணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர். விமர்சன உரையை செந்தமிழ்சொல்லருவி லலீசன் நிகழ்த்தினார்.இதில் வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்ர்கள் பிரதேச கலாசார பேரவை உறுப்பினர்கள் கலைஞர்கள் நலன்விரும்பிகள் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.வெளியீடு செய்யப்பட்ட இறுவெட்டில் பதினொரு பாடல்கள் இடம்பெற்றுள்ளது.வடமாராட்சி கிழக்கு கலைஞர்கள் கவிஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.இதற்க்கான இசையை வடமாகாண கலச்சார பேரவை இசைக்கூடத்தில் இசை அமைக்கப்பட்டது.
Comments
Post a Comment