கடலுக்கு குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடலுக்கு குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கடந்த23/12/2018 அன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தாளையடி வடமராட்சி கிழக்கை சேர்ந்த 46 வயதுடைய அருளானந்தம் ஜோன்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையென பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது கடல் அலை இழுத்து சென்றபோது அருகிலிருந்தவர்களால் காப்பாற்றபட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Comments
Post a Comment