கண்ணீரில் மூழ்கியது உடுத்துறை
சுனாமியால் காவு கொள்ளப்பட்டதன் 14 ஆண்டு நினைவேந்தல் உடுத்துறை சனாமி நினைவாலயத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.ச.அரியகுமார் ஆகியோர் ஏற்றியதை தொடர்ந்து சுனாமியால் மரணமடைந்தவர்களுக்கு சம நேரத்தில் ஈகை சுடரேற்றப்பட்டது.முன்னதாக சுனாமியால் மரணமைந்த 1002 பெயரது பெயரும் பொறிக்கப்பட்ட நினைவுக்கல் திரைநீக்கப்பட்டது.இதனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண முன்னாள் உறுப்பினருமான m.kசிவாஜிலிங்கம் திரை நீக்கம் செய்து வைத்தார்.இன்னைய இந்த சுனாமி நினைவேந்தல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான உறவுகள் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இதில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் சாவகச்சேரி நகர பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
Comments
Post a Comment