வவுனியா பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த சில நாட்களிற்கு முன்பாக பொலிஸாரால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட 14 வயது மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில்,அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதி வேண்டி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மாற்று, பள்ளி மாணவரின் இரத்தம் குடிக்கும் இரத்தக் காட்டேறியே ஊரை விட்டு வெளியேறு, சட்டத்தை மீறாதே சண்டித்தனம் செய்யாதே, முன்னை நாள் போராளிகள் என்ன உன் அடிமைகளா போன்ற வாசகங்களை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வார்ப்பாட்ட இடத்திற்கு சென்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் தென்னக்கோன் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் விரைவில் இதற்கான நல்ல தீர்வினை தருவதாக தெரிவித்ததன் அடிப்படையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முடிவிற்கு வந்தது.
இவ்வார்ப்பாட்டத்தில் கனகராயன்குளம் பாடசாலை மாவணவர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயுஸ்ரீரன் மற்றும் கனகராயன்குளம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் இவ் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கனகராயன்குளம் வர்த்தகர்கள் தங்கள் கடைகளை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்