கடற்றொழிலாளி ஒருவர் புறக்கணிப்பு மீன்பிடி நீரியல் திணைக்கள பணிப்பாளரின் சதி
திட்டமிட்டு புறக்கணிப்பு மக்கள் விசனம் வடமராட்சிக் கிழக்கில் சம்பவம்
வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் பல வருடங்களாக கரவலைத்தொழில் புரிந்துவந்த மரியாம்பிள்ளை யாக்கோப்பு றமேஸ்குமார் என்பவரது கரவலைப்பாடு
அந்த நபருக்கு வழகங்காது உடப்பு
பகுதியை சேர்ந்த ஒருவருக்கு
வழங்கப்பட்டுள்ளது.முன்னர் அந்த பாட்டில் தொழில் செய்தவர் இறந்துபோன நிலையில் புதிதாக ஒருவருக்கு இப்பாடு கிராம சேவையாளர் பிரதேச செயலர் ஆகியோரும் சிபார்சு வழங்கப்பட்டு கடற்றொழில் நீரியல் துறை பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் எமக்கு தெரிவித்தார்.மேலும் தனக்கு பல வருடங்களாக தற்காலிக பாட்டு அனுமதி வழங்கப்பட்டது என்றும் இவ்வருடமே அது வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஆவணங்கள் இணைப்பு
Comments
Post a Comment