யாழ். அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் ஆலய தொண்டர் சபையின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவும், மலர் வெளியீடும்
யாழ். அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் ஆலய தொண்டர் சபையின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவும், மலர் வெளியீடும் இன்று இரவு-09 மணி முதல் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.
இந்த விழாவில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு-திருமுருகன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த விழாவில் நாத சங்கமம், இசை நிகழ்ச்சி போன்ற கலைநிகழ்வுகளும் நடைபெறும்.
Comments
Post a Comment