வடமராட்சிக் கிழக்கு வீதிகள் மிகமோசம் நடுவீதியில் பார ஊர்தி புதைந்தது
வடமராட்சிக் கிழக்கு தாளையடியிலிருந்து சுண்டிக்குளம் வரையான வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்க்கு சொந்தமான மாகாண சபை வீதி பல வருடங்களாக திருத்தப்படாத நிலையில் உள்ளது.அண்மைக்காலமாக அவ் விதியின் நடுவில் வாகனங்கள் புதைந்து மிகமிகச் சிரமத்தின் மத்தியில் தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.சுமார் பதினைந்து நிமிடத்தில் செல்ல வேண்டிய பாதையில் நாற்பத்தைந்து நிமிடங்கள் செலவாகின்றபோதும் ஓரளவேனும் பாதுகாப்பாகக்கூட பயணிக்க முடியாதுள்ளது.மாகாண சபை நிதி செலவுசெய்யப்படாது வருடாந்தம் திரும்பி செல்லும் நிலையில் இந்த வீதி கவனிப்பாரற்று காணப்படுகிறது. இதேவேளை பருத்தித்துறை சாலையிலிருந்து செல்கின் பேரூந்துகள் கேவில் வரை செல்லாமல் கட்டைக்காடு சந்தியுடன் திரும்பி விடுகின்றன.இதனால் பயணிகள் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படிகின்றதுடன் கேவில் மக்களுக்கும் பேருந்து நடத்துனர் சாரதிகளுக்கு இடையே முறுகல் நிலை தொடர்ந்தும் காணப்படுகிறது.இது தொடர்பில் சாலை முகாமையாளர் பிரதேச செயலர் ஆகியோர்களுக்கு பல தடவைகள் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும் அந்த வழித்தடம் பருத்தித்துறை கேவில் என்பதும் இங்கு நோக்கத்தக்கது
Comments
Post a Comment