புலிகளின் உறுப்பினர் எனக் கூறி குடும்பங்களின் உரிமையை பறிக்கக் கூடாது மனித உரிமைகள் ஆணையம்

புலிகளின் உறுப்பினர் எனக் கூறி குடும்பங்களின் உரிமையை பறிக்கக் கூடாது மனித உரிமைகள் ஆணையம்

தகுதிகள் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் இன்றி தமது விருப்பத்திற்குரியவர்களின் பிரிவை நினைவுகூர்வது சகல குடும்பங்களுக்கும் உள்ள உரிமை எனவும் இறந்து போனவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்ற காரணத்தை காட்டி எந்த குடும்பத்திடம் இருந்தும் அந்த உரிமையை பறிக்கக் கூடாது எனவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளது.
இறுதிக்கட்ட போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் முல்லைத்தீவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு பின்னர் பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து வரும் அழுத்தங்கள் தொடர்பாக அருட் தந்தை எழில் ராஜேந்திரன் செய்த முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு , மனித உரிமை ஆணைக்குழு எழுத்து மூலமாக இதனை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement
நினைவேந்தல் நிகழ்வுக்கு பின்னர், பொலிஸார் பல பொலிஸ் நிலையங்களிலும் வீட்டிற்கு வந்தும் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவது தொந்தரவாக இருப்பதாக அருட் தந்தை எழில் ராஜேந்திரன், மனித உரிமை ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மனித உரிமைகளுக்கு தடையேற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வயதான பெற்றோரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் எனவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
முறைப்பாடு குறித்து கவனம் செலுத்தியுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம, இறந்தவர்களை நினைவுகூர்வது, அந்தந்த குடும்பங்களின் உரிமை எனவும் நினைவுகூரும் நிகழ்வுகளில் ஈடுபடும் நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்