திருமுருகன் காந்தி உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்
ஈழத்தமிழ் மக்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த குற்றச்சாட்டில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று முற்பகல் 10.30 அளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் திருமுருகன் காந்தியையும் அவரது தோழர்களையும் விடுதலை செய், நினைவேந்தல் நிகழ்வு தமிழர்களின் உரிமை தமிழக அரசே நசுக்காதே, ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்களை விடுதலை செய் என்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளைத் தாங்கியவாறும் கவனயீர்ப்பில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், சட்டத்தரணிகள் சிவன் சேனை அமைப்பு மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment