கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுவந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (வியாழக்கிழமை) வீதியை மறித்து பாரிய போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுவந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (வியாழக்கிழமை) வீதியை மறித்து பாரிய போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமது பிள்ளைகள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கோரி கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று நூறாவது நாளாகவும் தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையிலேயே, அம்மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.
தமக்கு தீர்வு கிட்டாவிடின் போராட்ட வடிவம் மாற்றம் பெறும் என ஏற்கனவே எச்சரித்துவந்த மக்கள் இவ்வாறு கிளிநொச்சி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதற்கு ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச்செயலர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர்களும் பல்கலை மாணவர்கள் பொது அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரும் தமது ஆக்கிரோசத்தை வெளிப்படுத்தினர்.
Comments
Post a Comment