திருத்த வேலைக்காக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையில் குழியில் கனரக வாகனம் வீந்து பாதை பல மணிநேரங்கள் தடை
திருத்த வேலைக்காக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையில் குழியில் கனரக வாகனம் வீந்து பாதை பல மணிநேரங்கள் தடைப்பட்டன. இச்சம்பவம் வடமராட்சிக் கிழக்கு குடாரப்பு பகுதியில் இடம்பெற்றன்.இன்று பிற்பகல் hallo trust நிறுவனத்திற்கு சொந்தமான கனரக வாகனத்தில் பக்கோவை ஏற்றி கொண்டு சென்றவேளை இறித்த கனகர வாகனம் குழியில் விழுந்ததுடன் பக்கோ அவ் வாகனத்திலிருந்து கீழே விழயந்துள்ளது. இதனால் பிற்பகல் 1:30 மணியிலிருந்து 6:00 மணிவரை எந்தவித போக்குவரத்தும் மேற்கொள்ள முடியாது தடைப்பட்டது.இதனால் பயணிகள் பெரிதும் சிரமமடைந்தனர்.
வீதி திருத்தம் நடைபெறுவதால் பாதை பாதுகாப்பு இன்மையாக காணப்படுகிறது.இதற்குரிய எச்சரிக்கை குறியீடுகளோ பாதுகாப்பு அறிவித்தல்களோ அல்லது இரவு நேர ஒளியூட்டல்களோ எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.
Comments
Post a Comment