இலங்கையில் 25 ஆம் திகதி முதல் ஏற்படப்போகும் மாற்றம்
இலங்கையில் 25 ஆம் திகதி முதல் ஏற்படப்போகும் மாற்றம்..
தென்மேற்கு பருவபெயர்ச்சி காலநிலை எதிர்வரும் நாட்களில் நாட்டின் ஊடாக நிலைகொள்ளக்கூடிய விதம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரித்துள்ளது.
குறிப்பாக இந்த மாதம் 25 ஆம் திகதி முதல் இது காணப்படக்கூடும் என்பதால் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனிடையே மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. (குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்)
Comments
Post a Comment